சனி, 26 மே, 2018

தமிழ்ச் சான்றோன் சுசுமு ஓனோ-யப்பான்

தமிழ;ச் சான்றோன்  சுசுமு ஓனோ-யப்பான்
டோக்கியோவில் 23.08.1919 இல் பிறந்தசுசுமு ஓனோ அவர்கள் பழங்கால ஜப்பானிய மற்றும் தமிழ் மொழி ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றிற்கிடையேயான ஒற்றுமைகளை வெளிக்கொணர்ந்தவர். 1943ம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 1944ல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரியத் தொடங்கினார். 1952 ஆம் ஆண்டு காக்சுயின் பலைகலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியில் உயர்ந்தார்.அந்தப் பணியுடன் டோக்கியோ பல்கலைக்கழகத்தில்1953 இல் விரிவுரை நிகழ்த்தியுள்ளார். 1960 இல் காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியுயர்வு பெற்றுத் தொடர்ந்து அங்குப் பணிபுரிந்தார்.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு பழஞ்சுவடியை ஆராய்ந்து இவர் வெளியிட்டதைச் ஜப்பானிய அறிஞர்கள் போற்றி இவருக்கு முனைவர் பட்டம் வழங்கினர். இந்த ஆய்வு 1950 இல் ஓர் ஆராய்ச்சி இதழில் வெளிவந்துள்ளதாக அறிஞர் பொற்கோ குறிப்பிடுவார். கியோட்டோ பல்கலைக்கழகம் வழியாக இவர் முனைவர் பட்டம் பெற்றவர்(1952). சுசுமு ஓனோ பழஞ்சுவடிகளை ஆராய்வதில் பேரறிவு பெற்றவர். சொல்லாராய்ச்சி, அகராதிகளில் ஈடுபாடு உடையவர்.இவர் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட ஜப்பானிய அகராதியின் படிகள் ஜப்பானில் பல்லாயிரக்கணக்கில் விற்கப்பட்டன.1981 இல் இவர் வேறொரு அறிஞருடன் இணைந்து உருவாக்கிய ஜப்பானிய ஒருபொருட் பன்மொழி அகராதி ஓர் ஆண்டில் இலட்சம் படிகள் விற்றனவாம்.
"ஜப்பானிய மொழியின் தோற்றம்" என்ற ஒரு நூலை உருவாக்கி 1957 இல் வெளியிட்டவர். இந்த நூல் ஐந்து இலட்சம் படிகள் விற்றனவாம்.இந்த நூலின் வருகைக்குப் பிறகு ஜப்பான்மொழி பற்றி அறியும் வேட்கை ஜப்பானியர்களுக்கு உருவானது.
ஓனோ அவர்கள் பதினொரு ஆய்வு நூல்களை வெளியிட்டவர். ஏழு நூல்களைப் பிற அறிஞர்களுடன் இணைந்து பதிப்பித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். பேராசிரியர் சிங்கிச்சி காசிமொத்தோ அவர்களின் மேல் சுசுமு ஓனோ அவர்களுக்கு நல்ல ஈடுபாடு உண்டு.அவர் வழியாகவே ஜப்பானிய மொழியாராய்ச்சியில் ஓனோ அவர்கள் ஈடுபட்டார்.ஆய்வு ஈடுபாடும் மொழிப்புலமையும் கொண்ட ஓனோ அவர்கள் மொழிவரலாற்று ஆய்வு,இலக்கண ஆய்வு,தொன்மையான ஜப்பானிய இலக்கிய ஆய்வுகளில் நல்ல ஈடுபாடு உடையவர்.
1957ல் அவர் ஜப்பானிய மொழியின் மூலத்தை ஆராயத் தொடங்கினார். அவர் ஜப்பானிய மொழியைக் கொரியன் அய்னு மற்றும் அசுடுரேனேசியன் மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தார். அந்த மொழிகளுடன் எந்த மரபு சார் தொடர்புகளும் அவரால் வெளிக்கொணர முடியவில்லை. இப்போது இவர் கவனம் திராவிட மெழிகளின் மீது பதிந்தது. பேராசிரியர் இமென்யு மற்றும் பொன். கோதண்டராமன் இவர்களின் தூண்டுதலால் இவர் ஜப்பான்-தமிழ் மொழியை ஆராயத் தொடங்கினார்.
இரண்டாம் உலகப் போரின் பொழுது கல்வித்துறைக்கு மிகப்பெரிய பங்களிப்புச் செய்ததையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.டோக்கியோ காக்சுயின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியாற்றிய சுசுமு அவர்கள் மொழிக்கல்வி உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர்.தமிழ் மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவை 30 ஆண்டுகளாக ஆய்வு செய்து 1999 இல் தம் ஆய்வை நூலாக வெளியிட்டார். ஜப்பானிய மொழியில் வெளிவந்த அந்நூல் 20 இலட்சம் படிகள் விற்பனை ஆயின (நாம் நூல்களை அச்சிட்டுவிட்டு நூலகத்துறையின் ஆணைக்கு ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடப்பதை எண்ணி வருந்துக).
தமிழ் படிக்கத் தமிழகத்திற்கு வந்த சுசுமு ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிபுரிந்த முனைவர் பொற்கோ அவர்களிடம் முறையாகத் தமிழ் கற்றார். பின்னர் இரண்டு பேராசிரியர்களும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தனர்.1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகச்சிறந்த ஆய்வு முடிவுகளை வெளியிடும் அளவிற்குச் சுசுமு ஓனோ அவர்களுக்குத் தமிழ் - ஜப்பானிய மொழி உறவு பற்றிய உண்மைகள் வெளிப்படத் தொடங்கின.
1979 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜப்பானிய மாந்தவியல் கழகத்தின் சார்பில் "ஜப்பானிய மொழிகளின் தோற்றம்" என்ற தலைப்பில் ஓனோ அவர்கள் டோக்கியோவில் உள்ள ஆசகி மண்டபத்தில் உரையாற்றினார்.ஆசகி இதழில் இக்கட்டுரை வெளியானது.தமிழ் ஜப்பானிய மொழிகுறித்து வெளிவந்த முதல் கட்டுரையாக பொற்கோ இதனைக் குறிப்பிடுகிறார்.கெங்கோ என்ற இதழிலும்1980ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஓனோ அவர்கள் தமிழ்-ஜப்பானிய உறவு பற்றி எழுதினார்.இதன் விளைவாகத் தமிழ்- ஜப்பானிய மொழி உறவு பற்றிஜப்பான் நாட்டில் ஒரு பரவலான அறிமுகம் ஏற்பட்டது.
ஆசகி என்ற நாளிதழில் வெளிவந்த கட்டுரை ஒன்றை ஜப்பானில் உள்ள இந்தியத்தூதரகம் சென்னைப்பல்கலைக்கழகத்தின் அந்நாள் துணைவேந்தர் முனைவர் தாமோதரனுக்கு அனுப்பியது.இதன்பிறகு துணைவேந்தரின் இசைவுடன் பொற்கோவும் ஓனோவும் இணைந்து தமிழ்- ஜப்பானிய மொழியாய்வில் ஈடுப்பட்டனர்.மடல்வழியாகஆய்வு முயற்சி நீண்டது.இந்த ஆய்வு பற்றி பொற்கோவுடன் கலந்துபேச ஓனோ அவர்கள் தனிப்பயணமாக 03.04.1980 இல் சென்னை வந்தார்.இரண்டு நாள் உரையாடலுக்குப் பிறகு ஜப்பான் திரும்பினார்.
தமிழ் ஜப்பானிய மொழித்தொடர்பு பற்றிய பல உண்மைகள் புரியத் தொடங்கியதும் ஜப்பானிய ஒலிபரப்பு நிறுவனம்(Nippon Hoso Kyokay) )கள ஆய்வுப்பணிக்கு உதவ முன்வந்தது. ஆசகி என்ற செய்தித்தாள் நிறுவனமும் உதவ முன்வந்தது.11.09.1980இல் ஜப்பானிலிருந்து களப்பணிக்குக் குழு புறப்பட்டது. ஒருமாத காலம் இந்தக்குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து களப்பணியாற்றித் தகவல் திரட்டியது.கள ஆய்வை முடித்துக்கொண்டு திரும்பிய ஓனோ அவர்கள் தம் குழுவினருடன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடினர்.பல்கலைக்கழக இசைவுடன் இந்தக் கலந்துரையாடலைச் ஜப்பான் என்.எச்.கே நிறுவனம் ஜப்பானிய தொலைக்காட்சிக்காகப் படம் எடுத்துக்கொண்டது.
தமிழகத்தில் களப்பணியில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள், தரவுகள் யாவும் ஒழுங்குபடுத்தப் பட்டு 01.11.1980 இல் ஜப்பான் நாட்டில் ஒளிபரப்பானது. ஒன்றரைக் கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர். மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டன. தமிழ்மொழியுடனும் தமிழ்நாட்டுடனும் பலவகையில் தொடர்புகள் தங்கள் மொழிக்கு உள்ளது என்று உணர்ந்ததே ஜப்பானியர்களின் மகிழ்ச்சிக்ககுக் காரணம். இத்தகு பெருமைக்குரிய ஓனோவுக்கு மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டுக்குச் சிறப்பு அழைப்பு அனுப்பத் தமிழக அரசு முடிவுசெய்தது.மாநாட்டின் பொது அரங்கில் இவர் கட்டுரை தமிழ் ஜப்பானியமொழிக்கு இடையிலான உறவு பற்றி படிக்கப்பட்டது.இந்து. எக்சுபிரசு உள்ளிட்ட ஏடுகள் புகழ்ந்து எழுதின.இவ்வாய்வு முடிவில் உடன்பாடு இல்லாமல் சில அறிஞர்கள் இருந்துள்ளமையையும் அறியமுடிகிறது.
12.09.1980 ஆம் ஆண்டு இந்து நாளிதழில் "தமிழ் ஜப்பானிய மொழியில் திராவிடமொழிகளின் செல்வாக்கு" பற்றிய ஒரு கட்டுரையை எழுதினார். ஜப்பானிய மொழிகளின் வேர்ச்சொற்கள் தமிழில் இணைவதை விளக்க ஐந்நூறு சொற்களைச் சான்றாகக் காட்டி வேறொரு கட்டுரையும் வரைந்தார். இவையெல்லாம் தமிழுக்கும் ஜப்பானிய மொழிக்கும் உள்ள உறவுகளை விளக்கும் வகையில் அமைந்திருந்தன.இக்காலத்தில் "உயிரிடைப்பட்ட வல்லொலிகள்" என்ற தலைப்பிலும்,"மொழிமுதல் சகரம்" என்ற தலைப்பிலும் இவர் உருவாக்கிய ஆய்வுரைகள் சிறப்புடையனவாகும்.
ஓனோ அவர்கள் தமிழ் ஜப்பானிய உறவு பற்றிய தம் ஆய்வுகள் குறித்துத் திராவிட மொழிகளைப் பற்றி நன்கு ஆராய்ந்த எமனோ,பர்ரோ அவர்களின் கருத்தறிய விரும்பினார். அதன்பொருட்டு அமெரிக்கா சென்று எமனோ அவர்களைக் கண்டு உரையாடினார்.எமனோ அவர்கள் மிக மகிழ்ந்து இவ்வாய்வைப் பாராட்டினார்.1981ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓனோ அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகம் வந்து தம் ஆய்வைத் தொடர்ந்தார்."தமிழ் ஜப்பானிய ஒலி ஒப்புமை" என்ற ஒரு நூல் எழுதித் தம் ஆய்வை உலகிற்கு வழங்கினார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு வந்தபிறகு பொற்கோ அவர்களின் நெறிப்படுத்தலில் பல வகையில் தம் ஆய்வுப்பணிகளை வரன்முறைப்படுத்தி ஈடுபட்டார். மொழி ஒப்பியல் வரலாற்றுக்கொள்கைகளை ஊன்றிப் படித்தார்.திராவிடமொழியியலில் வெளிவந்த நூல்களைக் கற்றார். ஆழமாகத் தமிழ்மொழியையும் இலக்கண இலக்கியங்களையும் அறிந்தார்.
தமிழ்மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் மொழிக்கூறுகளில் ஒப்புமை இருப்பது போலவே இலக்கியப் பாடுபொருளிலும் ஒற்றுமை உள்ளதை உணர்ந்தார்..நம் சங்க இலக்கியங்கள் போலச் ஜப்பானிய மொழியில் மங்யோசு என்ற தொகை இலக்கியம் உள்ளது.இரண்டு தொகைகளிலும் பாடுபொருள் ஒற்றுமை உள்ளது.தமிழ் ஜப்பானிய உறவுக்கு ஒலி அமைப்பு, சொல் அமைப்பு,சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றையும் தொல் இலக்கியங்களையும் சார்ந்து ஆய்வை வளர்த்துள்ளார்.ஒலியாலும் பொருளாலும் ஒப்புமை உடைய நானூறு சொற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
(எ.கா)
நம்பு- நமு
யாறு- யற
நீங்கு-நிகு
உறங்கு-உரகு
கறங்கு-கரகு
அகல்-அகரு
அணை-அண
கல்-கர

எனச் சொல் ஒற்றுமை உள்ளன. சுசுமு ஓனோ அவர்கள் ஜப்பானிய அரசின் பரிசும் பாராட்டும் பெற்றவர்.
இலங்கைப் பேராசிரியர்கள் முனைவர் சண்முகதாசு,பேராசிரியர் மனோன்மணி சண்முகதாசு ஆகியோரும் சுசுமு ஓனோ அவர்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளனர்.மொழியியல் ஆய்வில் வல்ல பேராசிரியர் அ.சண்முகதாசு அவர்களும் பண்பாட்டு ஆய்வுகளில் சிறந்த அவர்மனைவி மனோன்மணி அவர்களும் ஓனோ அவர்களின் ஆய்வுக்குப் பல வகையில் உதவியவர்கள். தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவைப் போலச் ஜப்பானில் அறுவடைத் திருவிழா நடைபெறுவதை எடுத்துரைத்தவர் சுசுமு ஓனோ அவர்கள்.தமிழர்களின் திருவிழாவான பொங்கலைப் பற்றி ஆராயத் தொடங்கினார்.பொங்கலை ஒத்த அதே நாளில் ஜப்பானில் ஒரு விழா நடைபெறுகிறது.அதனைச் சிறிய புத்தாண்டு(Koshogatsu )என்பர்.விழா நாளில் கொங்கரா எனக் குரல் எழுப்புவர். எனவே இதனைக் கொங்கரா என்பர்.தமிழ்நாட்டுப் பொங்கலுக்கும் ஜப்பானிய கொங்கராவிற்கும் மொழிவகையிலும் பண்பாட்டு வகையிலும் தொடர்பு உண்டு என்பதை உணர்ந்தார். 1982 இல் தமிழகத்துப் பொங்கல் விழாவைக் கண்டு இது ஜப்பானில் கொண்டாடப்படும் பொங்கலுடன் நெருக்கமாக உள்ளதைக் கண்டு வியந்தார். நான்கு நாள் நடைபெறும் விழாக்களும் ஜப்பானில் நடைபெறும் விழாவும் எந்தவகையில் ஒற்றுமையுடையன எனக் கண்டு புலமை இதழில்(1981 டிசம்பர்) எழுதினார்.பழைனவற்றைக் கழித்தல்,சிறுபறை முழக்கல், அரிசியிட்டுப் பொங்கலிடுதல், வாசற்பொங்லன்று காக்கைக்குச் சோறிடல், கொங்கரோ கொங்க என்று கூவுதல் ஆகிய நிகழ்வுகள் ஜப்பானில் நடைபெறுகிறதாம். மாடுகளுக்கு நாம் உணவு ஊட்டுவதுபோல் ஜப்பானில் சில பகுதிகளில் குதிரைக்கு உணவு ஊட்டுவது உண்டாம்.
தமிழுக்கும் ஜப்பான் மொழிக்கும் இடையில் இலக்கிய,இலக்கண,கல்வெட்டு,நாட்டுப்புறவியல் செய்திகளுடன் உள்ள உறவையும் வெளிப்படுத்தியவர். ஜப்பானின் யாயோய் கல்லறைகளுடன் தென்னிந்தியா மற்றும் இலங்கையிலுள்ள (கி.மு. 1300300) காலப்பகுதி கல்லறைகளுடன் ஒப்பிட்டு அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1990 களின் முற்பகுதியில் வெளியிடப்பட்ட அவரின் ஆய்வுமுடிவுகள் இரு பண்பாட்டுக்குமிடையில் இலக்கியம்,பண்பாட்டு நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் ஒற்றுமைத் தன்மைகள் வியக்கத் தக்க வகையில் இருந்ததை வெளிப்படுத்தின. இவருடைய பணியைப் பற்றி கமில் சுவலபில் அவர்கள் 1990 இல் சொன்னது : ஜப்பான் மற்றும் திராவிட மொழிகளின் ஒற்றுமையைத் தற்செயலானது என எளிதில் ஒதுக்கிவிட முடியாது. மற்றும் இது ஆழமான மரபு வழி ஒற்றுமையை நமக்குப் புலப்படுத்துகிறது. ஓனோவின் இந்த ஆராய்ச்சி ஒற்றுமையை மெய்ப்பிக்க முயற்சி செய்யும்.
சென்னையில் தங்கியிருந்தபொழுது அவர் எழுதி "உயிரிடை நின்ற வல்லினம்" என்ற கட்டுரை திராவிட மொழியியல் கழகத்தின் ஏட்டில் வெளிவந்தது.உலக அளவில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகள் மாநாடுகளில் கலந்துகொண்டு தமிழ் ஜப்பானிய உறவுபற்றிய கட்டுரை படித்தவர்.தமிழகப்புலவர் குழு இவருக்குத் தமிழ்ச்சன்றோர் என்ற பட்டம் வழங்கிப் பாராட்டியுள்ளது.சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் ஜப்பானிய மொழியைக் கற்பிக்க தில்லியிலிருந்து முனைவர் பாலாம்பாள் அவர்களை அழைத்துப் பணியமர்த்தம் செய்ததில் இவருக்குப் பங்கு உண்டு. 1999 இல் தமிழகம், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து தமிழியல் மற்றும் மொழியியல் அறிஞர்களைச் ஜப்பானுக்கு அழைத்துத் தமிழ் ஜப்பானியமொழி உறவு பற்றிப் பேசினார் இதில் பொற்கோ ஒருங்கிணைப்பாளர். பேராசிரியர்கள் அகத்தியலிங்கம், செ.வை. சண்முகம்,கி.அரங்கன், வ.ஞானசுந்தரம்,தங்க.மணியன் ஆகியோர் இந்தியாவிலிருந்தும்,சண்முகதாசு, மனோன்மணி சண்முகதாசு இலங்கையிலிருந்தும்,மணியன் கிருட்டினன், கந்தசாமி, குமரன் மலேசியாவிலிருந்தும் சென்றனர். இந்த ஆய்வரங்க உரைகள் தொகுக்கப்பட்டுச் ஜப்பானிய மொழியில் வெளிவந்தன.29 ஆண்டுகள் தமிழ் ஜப்பானிய ஆய்வில் தொடர்ந்து ஈடுப்பட்ட ஓனோ அவர்களைச் ஜப்பானிய மக்களும்,ஆய்வறிஞர்களும் போற்றி மதிக்கின்றனர்.
தமிழ்க் கல்வி நிறுவனங்கள், தமிழ்அறிஞர்களுடன் பேராசிரியர் சுசுமு ஓனோ நீண்டகாலத் தொடர்புகளைப் பேணிவந்தார். ஜப்பானிய மாணவர்கள் பலரைத் தமிழ் மொழியைக் கற்குமாறு அவர் ஊக்குவித்தார்.தமிழுக்கும் ஜப்பானுக்கும் உறவுப்பாலம் அமைத்தார். தமிழ் மொழிக்கும் ஜப்பான் மொழிக்கும் இடையில் நெருங்கியத் தொடர்பு உள்ளதைப் பல்வேறு சான்றுகள் வழியாக உலகிற்கு வெளிப்படுத்திய பேராசிரியர் சுசுமு ஓனோ அவர்கள் தம் 89 ஆம் அகவையில்14.07.2008 திங்கள் கிழமை டோக்கியோவில் இயற்கை எய்தினார்.அறிஞரை இழந்து தமிழுலகம் வருந்துகிறது.
டிஸ்கி 1 : இதுபற்றி ஜப்பான் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை
டிஸ்கி 2 : சொற்கள், இலக்கணம், பொங்கல் திருவிழா, பெண்பார்க்கும் முறை என எல்லாமே இருமொழிகளிலும் ஒன்றாய் இருப்பதை வெறும் தற்செயல் என ஒதுக்கிவிட முடியாது. நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும். இதில் நகைச்சுவை என்னவென்றால் இதுவரை தமிழ்பற்றி ஆராய்ந்து அதன் பெருமைகளைப் போற்றியவர்கள் வேற்றுமொழிக்காரர்களே!
http://www1.gifu-u.ac.jp/…/Susumu%20Ohno%201919-2008%20appr…
நன்றி  முத்தமிழ் வேந்தன்   face book
.....தமிழ்ச்சுடர் க. உயிரவன் thamilaali@gmail.com

வியாழன், 25 பிப்ரவரி, 2016

தமிழாழியின் தலைவர் தமிழ்மணி க. உயிரவனின் தாயார்


அமரர் திருமதி கந்தசாமி பாலாம்பிகை 

மண்ணில் (11-07-1942 ) விண்ணில் ( 03-02-2016) 

தரணியில் தவிக்கும் தமிழாழி உறவுகளின்பாச வணக்கத்தினை பாதங்களில் மலராக தூவுகின்றோம்..


சனி, 31 ஜனவரி, 2015


தமிழகப் பெருங்கற்கால நாகரீகத்தின் கடைசி எச்சங்கள்

மல்லசந்திரம் கற்திட்டைகள்: கண்முன்னே சிதையும் தமிழகப் பெருங்கற்கால நாகரீகத்தின் கடைசி எச்சங்கள்

கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூர் வட்டம் சூளகிரிக்கு அருகில் அமைந்துள்ள சிற்றூர் பீர்பள்ளி-மல்லசந்திரம். இங்குள்ள மோரல்பாறை என்றழைக்கப்படும் குன்றுகள் பெருங்கற்கால ஈமச்சின்னங்களான கற்திட்டைகளால் போர்த்தப்பட்டவை.

3000 வருடங்களுக்கு முந்தைய மாபெரும் ஈமக்காடு! இதன் சிறப்பு சிலவற்றின் இரட்டை இடுதுளைகள் மற்றும் இச்சின்னங்களுள் வரையப்பட்டுள்ள ஓவியங்களுமாகும்!

மலையில் இருபதுக்கும் மேற்பட்ட கல் வீடுகள், செங்குத்தாக நாற்புறமும் கல் பலகைகள். அதன் மேலே உத்தரம் போலப்படுக்கை வாக்கில் ஒரு கல் பலகை. ஆக மேலேயும் அடைப்பு, நாலாபுறமும் அடைப்பு, அதில் கிழக்கு திசை நோக்கிய செங்குத்தான கல் பலகையின் மையப்பகுதியில் பெரிதாக வட்ட வடிவத்தில் மிகப்பெரிய துளை. இது தான் அந்த கல் வீடுகளின் அமைப்பு.

பழக்குடி மலைவாழ் இன மக்கள், இறந்தவர்களை புதைக்கும் நான்கு வகைகளின் இதுவும் ஒன்று. கிழக்கு நோக்கிய கல் பலகை சுவரில் வட்ட வடிவ பெரிய துளை எனப்பெயர்.

எதற்கு இந்த இடுதுளை?

இறந்தவர்களின் ஆவி உள்ளேயிருந்து வெளியே போவதற்கும் வெளியே சென்று விட்டு உள்ளே திரும்புவதற்குமான வழியே அந்த இடுதுளை, உடல் அழியக்கூடியது. ஆவி அழியாதது என்கிற நம்பிக்கை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் மத்தியில் நிலவியுள்ளது. இது போன்ற ஈமக்கல் திட்டைகள், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மல்லசந்திரம், பீர்பல்லி, மகாராஜாகடை, வரவணகுண்டா, செல்ல சந்திரம், தளி போன்ற பகுதிகளில் ஏராளம். கர்நாடகாவின் கோலார், ஆந்திராவின் சித்தூர் பேநான்ற பகுதிகளிலும் ஈமக்கல் திட்டைகள் உள்ளன. இது போன்ற திட்டைகள் நம் நாட்டில் மட்டுமில்லை. மேல் நாடுகளிலும் உள்ளன. இவை பற்றி விரிவாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வாழ்ந்த மானிடவியல் ஆய்வார் ப்ரேசர் என்பவர் பன்னிரண்டு வால்யூம் புத்தகங்களை எழுதி குவித்துள்ளார்.

அழிவின் விளிம்பில் தொன்மங்கள்! ஆதிக்குடிகளின் நிலம் அறியப்படாத வளம்!
--------------------------------------------------------------------------------------------

கிருஷ்ணகிரி பகுதி என்பதற்கான உத்தேச எல்லை எது?

புவியியல் ரீதியாக ஒரு பரந்து பட்ட பகுதி இது. ஆந்திராவின் குப்பம், பலமனேர் பகுதி, கர்நாடகாவின் கோலார், பெங்களூர், மைசூரின் ஒரு பகுதி, தமிழகத்தின் தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்டம், தருமபுரியில் அரூர் வட்டம், திருவண்ணாமலையில் செங்கம் வட்டம், வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, குடியாத்தம் ஆகிய பெரிய பரப்பைஉள்ளடக்கியது.

தொப்பூரும் இந்தப் பரப்புக்குள் வருகிறதா?

தொப்பூர் மலைப்பகுதி தகடூர் பரப்புகளில் முக்கியமான ஒன்று. ராஜேந்திர சோழனின் முரசுகளில் ஒன்று நெருப்பூரில் இருப்பதாக தகவல் உள்ளது.

கிருஷ்ணகிரி பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய சான்றுகள் எவை? என்னென்னஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்?

கிருஷ்ணகிரி பகுதியில் எங்கு தடுக்கி விழுந்தாலும் அந்த இடம் ஒரு பெருங்கற்காலநாகரிகப் பகுதியாக இருக்கும். பழைய கற்காலம், புதிய கற்காலம் மற்றும்இரும்புக்காலம் தொடர்ந்து தற்காலம்வரை தொல்லியல் சின்னங்கள் அதிகளவில் இப்பகுதியில்தான் கிடைக்கின்றன. குடியம், ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களின் மீது காட்டப்படும் அக்கறை இப்பகுதியில் காட்டப்படவில்லை. வரட்டனப்பள்ளியில் ஒரே இடத்தில் கற்கால ஆயுதங்கள் லாரி லாரியாக குவிந்து கிடக்கின்றன. இதனை தொல்லியல் அறிஞர்கள் தொழிற்சாலைப் பகுதி என்கிறார்கள்! கற்கால மனிதன்வேட்டையாடும் கருவிகளுக்கு தொழிற்சாலையா வைத்திருந்தான்? தேவைக்கு மிஞ்சிய எதையும் வைத்துக் கொண்டிராத அல்லது யோசிக்கத் தோன்றாத மனிதனாக இருந்தவன் ஆயிரக்கணக்கில் கல்லாயுதம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? ஒரே இடத்தில் இவ்வளவு குவியல் குவியலாக கல்லாயுதம் கிடைக்கக் காரணம் என்ன?

அடுத்து குட்டூர் மலையடிவாரப் பகுதி. ஆசியாவிலேயே மிகப் பெரிய இரும்பு உருக்குஉலைக்கூடங்கள் இன்றும் இருக்கும் பகுதி. இரட்டை அடுப்பு கொண்டது. 2.20 மீட்டர்நீளமும், 0.63 மீட்டர் அகலமும் 0.45 மீட்டர் ஆழமும் உடைய அடுப்பிலிருந்து இரும்புகனிமம் உருகி ஓடும் பகுதி செங்கற்களால் கட்டப்பட்டிருந்தது. இதுபோன்று மூன்றுஉலை அடுப்புகளுக்கு மேல் இப்பகுதியில் 3000 வருடங்களாக இருக்கின்றன. கப்பல்வாடி, வரட்டனப்பள்ளி கல்லாயுதங்கள் 55,000 வருடங்களுக்கு முந்தையவை என்று காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளன. குட்டூர் பகுதி கி.மு.1000-500 காலக்கட்டத்தையவை என்று சொல்லப்படுகிறது.

சங்க இலக்கியங்கள் எவ்வாறு முக்கியமோ அவ்வளவு முக்கியத்துவம் இதுபோன்ற இடங்களுக்கும் உண்டு. ஏனென்றால் சங்க இலக்கியத்தில் தகடூர் தச்சன் வலிமை பற்றிபேசும் பாடல் உண்டு. வேல் வடித்து கொடுத்தல் கொல்லர்க்கு கடனே, வாளுடன் முன் தோன்றிய மூத்தகுடி என்றெல்லாம் பேசுவோம். ஆனால் கண்ணுக்கு முன்னே மூவாயிரம் வருடங்களாக அனாதையாக ஆனால் பொருள் சாட்சியாக விளங்கும் இவற்றையெல்லாம் பாதுகாக்க யாரும் அக்கறை கொள்வதில்லை. ஸ்காட்லாந்தில் இருந்து இந்தோனேசியா வரை கி.மு.3000 கி.பி. 300 வரை ஒரு பெருங்கற்கால நாகரிகம் இருந்திருக்கிறது. அவர்கள் மொழி, பண்பாடு முதலானவை இன்னும் அறியப்படாமல் இருக்கிறது. சிந்து சமவெளி எழுத்துக்கள் எவ்வாறு இன்றுவரை படிக்கப்படாமல் புதிராக உள்ளதோ அதுபோலவே இந்த பெருங்கற்கால நாகரிகம் தொல்லியல் அறிஞர்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே விளங்குகிறது.

இந்திய தொல்லியலின் தந்தை எனப்படும் இராபர்ட் புரூஸ்புட் கிருஷ்ணகிரி பகுதியில் அலைந்து திரிந்து கண்டறிந்த பெருங்கற்கால இடங்களெல்லாம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. கிருஷ்ணகிரி பகுதியில் காணப்படும் தொன்மையான சான்றுகள் எல்லாமே ஆந்திர, கர்நாடகப் பகுதிகளுக்கும் பொருந்திப் போகிறது. சங்காலியா, கூர்ஜர ராவ், சுந்தரா, கா.ராஜன் மற்றும் டி. சுப்பிரமண்யம் ஆகியோர் பெருங்கற்காலத்தைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து ஆராய்ந்திருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் இடங்கள் வகைகள் பற்றிய தகவல்களாகவே உள்ளன. அறிவியல்பூர்வமாக பொறியியல் கணிதவியல் கட்டிடவியல் சார்ந்து ஆய்வுகள் செய்யப்படவில்லை.

பழைய கற்காலத்திலிருந்து புதிய கற்காலம் பிறகு பெருங்கற்காலம் வரை வேட்டையாட கற்கால ஆயுதங்கள பயன்படுத்தியவர்கள் கி.பி.300 வரை இருந்திருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் ராஜா ராணி யெல்லாம் தங்கம் வைத்துக்கொண்டு இருந்த அதே காலத்தில், 2000 வருடங்களுக்கு முன் ரோமானிய நாட்டுடன் வணிகம் செய்து வந்த அதே காலகட்டத்தில் இங்கு பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். மலைப்பகுதியிலும், எப்பொழுதும் தண்ணீர் கிடைக்கின்ற பகுதிகளிலும் தான் வசித்திருக்கிறார்கள். தமிழகத்தில் புதிய கற்கால வாழ் விடமான பையம்பள்ளி தற்போதைய வேலூர் மாவட்டத்தில் இருந்தாலும் கிருஷ்ணகிரி பகுதியைச் சார்ந்ததுதான். பையம்பள்ளியில் காண்டா மிருகத்தின் எலும்புகள் கிடைத்ததாக டாக்டர் எஸ்.ஆர்.ராவ் (கிருஷ்ண பரமாத்மாவின் துவாரகாவை அகழ்வாய்ந்தவர்! ) கண்டறிந்தார்.

பெருங்கற்கால சின்னம் என்றால் என்ன?

புதிய கற்காலத்தை அடுத்த காலகட்டத்தை பெருங்கற்காலம் என்று வரையறுக்கிறோம். தமிழ்நாட்டில் பெருங்கற்காலம் இரும்புக்காலத்தை ஒட்டியதாகும். இறந்தவர்களின் ஈமப் புதைகுழிகளின் மீது பெரிய பெரிய கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஈம நினைவுச்சின்னங்கள் பெருங்கற் படை சின்னங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் பலவகைகள் உண்டு. கற்பதுக்கைகள் (Cist) கற்கிடை (Dolmen) குத்துக்கல் (Menhir) பரல் உயர் பதுக்கை (Cairn Circle) என்று இதன் எல்லா வகைகளும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடைக்கின்றன.

தாழிகள், ஈமப்பேழைகள் என பண்டைய மட்பாண்டங்களில் எத்தனை விதங்கள் உண்டோ அத்தனையும் இந்த பெருங்கற்கால ஈமச்சின்னங் களில் கிடைக்கின்றன. மல்லசந்திரம் கற்கிடைப்பகுதி ஒரு மலைமீது அமைந்துள்ளது. இது பண்டைய ஈமச்சின்னங்களின் காடு என்றே சொல்லலாம். எகிப்து பிரமிடுகள் போன்று காப்பாற்றப்பட வேண்டிய முக்கியமான பகுதி இது.

இந்தப்பகுதியில் என்னமாதிரியான வழிபாடு இருந்தது?

இன்று வரைக்கும் இயற்கையோடு இயைந்த மூத்தோர் வழிபாடுதான் இருக்கிறது. இங்கு சாதாரணர்களிடம் பெருந்தெய்வங்களே கிடையாது. கங்கர்கள், நுளம்பர்கள் காலத்திய கோயில்கள் தருமபுரி பகுதியில் காணக் கிடைக்கின்றன. தருமபுரி கோட்டை மல்லிகார்ஜூனர் கோயில் 1100 வருடங்களுக்கு முந்தைய சமணக்கோயிலாகும். மக்களின் போக்கில்தான் வழிபாடு இருந்துள்ளது. ஒசூரிலிருக்கும் மலைக்கோயிலில் சமணத்தின் பதிவுகள் இருக்கின்றன. இந்த ஊரின் பெயர் செவிடப்பாடி. சாமிப்பெயர் சேவுடைநாயனார். சேவு என்றால் காளை. சந்திரசூடேஸ்வரர் என்பதே மிகவும் பிற்காலத்திய பெயர். பெருந்தெய்வங்கள் பெரிய அரசர்களின் காலத்தில்தான் வந்தன. தீர்த்த மலையில் சோழர்கள் கொடுத்த நிவந்தங்கள் பற்றிய குறிப்புள்ளது. இங்குள்ள துர்க்கைக்கு திரிசூலி என்று பெயர். அது ஏழாம் நூற்றாண்டு பொறிப்பு ஆகும். ஏறக்குறைய ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய பல்லவர்கால கோயில் ஒன்றுகூட தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இல்லை. வாணியம்பாடியில் உதயேந்திரத்தில் மட்டும்தான் பிற்கால பல்லவர்கால கோயில் உண்டு. கடத்தூர் பெருமாள் கோவிலில் இருப்பது திருடி கொண்டுவரப்பட்ட பல்லவர்கால செப்புத்திருமேனியாகும்.

ஆனெக்கல், கும்ளாபுரம் பகுதிகளில் கிடைக்கிற பழங்காலச் சின்னங்கள் பற்றி?

பசவண்ணருக்கு முன்பிருந்தே கும்ளாபுரம் வீரசைவர்களின் மையப் பகுதியாக இருந்தது. 13ம் நூற்றாண்டில் எற்படுத்தப்பட்ட வீரசைவ மடம் இன்றும் உள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் எப்படி வாடிகன் போப்பிற்கு கட்டுப்பட்டவர்களோ அதேபோல இங்குள்ள பலசாதியினருக்கு தலைமை மடங்கள் இருந்தன. வரிவசூல்சாதி கட்டுமானம் உள்ளிட்ட நிர்வாகங்களை ஆங்கிலேயர்காலம் வரை நடத்தியிருக்கின்றன. அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் இப்போது ஒரு சிலவே எஞ்சியுள்ளன.

கிருஷ்ணகிரி சையத் பாஷா மலை தொன்மையானது தானே?

சையத்பாஷா மலை என்ற பெயர் நூறுவருடத்தியதுதான். சிலர் சொல்வது மாதிரியான இந்து வரலாறு எதுவும் அதற்கு கிடையாது. கிருஷ்ணதேவராயர் மலை என்பதற்கான ஆதாரமும் இல்லை. அங்கு கங்கர்களுடைய கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன.அங்கிருக்கும் சமண கல்வெட்டுகள்கூட நன்கொடை வழங்கியதைப் பற்றிதான் சொல்கின்றன. 2000 வருடங்களுக்கு முந்தைய பாறை ஓவியங்களும் குகைஓவியங்களும் இந்த மலையில் இருக்கின்றன. வங்காளத்தில் சிராஜ் உத்தௌலாவுக்கு எதிராக பிளாசிப் போரில் பயன்படுத்திய பீரங்கி ஒன்று மைசூர் போர்களுக்காக கொண்டு வரப்பட்டு இந்த மலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒசூர் பக்கமுள்ள சித்திரமேழி நல்லூரில்கூட கல்வெட்டுகள் உள்ளதுதானே?

ஆமாம். அது உழவர்கள் தமக்குள் நடத்திக்கொண்ட வணிகம்- கொடுக்கல் வாங்கல்கள் குறித்தவை. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந் தவை. மட்டுமல்ல, மனிதநாகரீகத்தின் முக்கிய ஒன்பது கண்டுபிடிப்பு களில் ஒன்றான கலப்பை, நல்லூருக்கு அருகிலுள்ள எட்ரப்பள்ளி மேல் பள்ளம் பகுதியிலுள்ள ஒரு குகையில் பாறை ஓவியமாகவே கிடைத்திருக்கிறது. அதாவது வரலாற்று தொடக்ககாலத்திய உழவு பற்றிய பதிவாக இதனைக் கொள்ளலாம். எகிப்து பிரமீடிலும் சீன மற்றும் கிரேக்க நாகரீகப்பகுதிகளிலும் மட்டுமே கலப்பை கொண்டு ஏர் உழும் சான்றுகள் கிடைத்துள்ளன. இங்கு பாறை ஓவியமாகவே கிடைத்திருப்பது அரிய ஒன்று. இந்திய பாறை ஓவியங்களில் வேளாண்மை பற்றிய முதன்மையான பதிவு இதுவே. ஏனென்றால் இரும்புகாலத்திய பெருங்கற்காலத்து மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர் என்று சொல்லப்படுவதற்கு இது ஆதாரமாக விளங்குகிறது.

கிருஷ்ணகிரி பகுதியில் தொல்லியல் ஆய்வு செய்யப்பட வேண்டிய இடங்கள் எவையெவை?

எட்றப்பள்ளி, கங்கலேரி, வேடர்தட்டக்கல் மற்றும் மூங்கில் புதூர் பகுதிகளில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பகுதியில் உள்ள பெருங்கற்கால ஈமச்சின்னங்களின் பரிமாணம் மற்றும் பிரம்மாண்டத்தை காட்டவே பிரமிடுடன் ஒரு சிறு ஒப்பீடாக சொன்னேன். உதாரணத்திற்கு வேடர் தட்டக்கல்லில் இருந்த ஒரு ஈமப் புதைக்குழியின் மேல் வைக்கப்பட்டிருந்த பரல் உயர் பதுக்கைகல்லை உடைத்து ஐந்து வீடுகளுக்கு கடைக்கால் போட்டிருக்கிறார்கள் என்றால் அதுஎவ்வளவு பெரிய கல்லாக இருந்திருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள். 2அடி தடிமன் உள்ள 15 அடிக்கு 10 அடி நீள அகலமுள்ள ஒரு பெரியசெதுக்கப்பட்ட கல்லை 2 அடி அல்லது 3 அடி உயரத்திற்கு கற்களின் மீதுஏற்றிவைத்துள்ள தொழில் நுட்பத்தை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
1000 வருடம் பழமையுள்ள தஞ்சை பெரிய கோவிலின் சிகரம் (அது பல துண்டுகளால்ஆன கல்) மேலே கொண்டு செல்ல சாரப்பள்ளம் என்றெல்லாம் கதைவிடுகிறார்கள். ஆனால் ஒரே கல்லாலான- அதை விட ஆயிரம் மடங்கு பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த ஈமச்சின்னங்களைக் கண்டுகொள்ளத்தான் எவரும் இல்லை. யாரோ ஒரு சிலர் சில ஆயிரம் கோடிகள் சம்பாதிப்பதற்காக பல லட்சம் வருடங்களாக இருக்கும் மலைகளும், மானிட இனத்தின் அழியாத்தடங்களான தொல்லியல் சின்னங்களும் கிரானைட் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் பெயரால் அழிக்கப்பட்டு வருகின்றன. குரல் கொடுக்கத் தான் ஒருவருமில்லை.தமிழ்ச்சுடர் க. உயிரவன்  thamilaali@gmail.com
கம்பைநல்லூர்

பெருங்கற்கால புதிர்நிலை கண்டுபிடிப்பு

2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தொல்லியல் ஆய்வாளர் தகவல்

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருங்கற்கால புதிர்நிலையை கிருட்டிணகிரி மாவட்ட தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

தொல்லியல் ஆய்வு

கிருட்டிணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம் மற்றும் பெண்ணையாறு தொல்லியல் சங்கம் சார்பில் கிருட்டிணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொல்லியல் குறித்து அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது.

தொல்லியல் ஆய்வாளர்களான கிருட்டிணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த சுகவன முருகன் மற்றும் பெண்ணையாறு தொல்லியல் சங்கத்தை சேர்ந்த சதானந்தம் கிருஷ்ணகுமார் ஆகியோர் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் சுமார் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருங்கற்கால புதிர்நிலையை கண்டுபிடித்துள்ளார்கள்.

இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன் கூறியதாவது:-

புதிர் நிலைகள்

புதிர்நிலைகள் என்பது மையத்தில் விடையை கொண்டு உள் மற்றும் வெளிச்செல்ல இயலாத பல்வேறு சூழ்நிலைப் பாதைகளுடன் விளங்குபவையாகும். இத்தகைய புதிர்நிலைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கிறது என்பது புதிய கற்காலத்தில் இருந்தே தொல்லியல் ஆய்வாளர்கள் பதிவு செய்து வருகிறார்கள். இதில் வட்டப் புதிர் வழிகள் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். உதாரணமாக மகாபாரதத்தில் அபிமன்யு சிக்கிக்கொண்டு உயிரிழந்த சக்கரவியூகம் இவ்வாறான புதிர்நிலையாகும்.

பெரிய புதிர்நிலை

தென்னிந்தையாவில் முதன் முதலில் கிருட்டிணகிரி பகுதியில் வட்டப்புதிர் நிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 30 ஆண்டுகள் கழித்து தற்போது தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் சதுர புதிர்நிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது உலகில் கண்டுபிடிக்கப்பட்ட புதிர்நிலைகளிலேயே பெரியதாகும். ஏறத்தாழ 80-க்கு 80 அடி பரப்பில் உள்ளது. இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளது. இது பழமையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்.

இந்த புதிர்நிலை குறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, “அரசனால் சிறைபடுத்தப்பட்ட கணவனை உயிருடன் மீட்ட மனைவியின் கதை” என்கிறார்கள்.

இந்த புதிர்நிலையில் உள்ள ஏழுபட்டை தளப்பாதையில் நடைபயின்று வெற்றி அடைபவர் மனதில் நினைத்தைப் பெறுவர் என்பதும், கற்களைத் தாண்டிச் செல்பவர்கள் நற்பலன்களை இழப்பர் என்பதும் இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இவ்வாறு சுகவன முருகன் கூறினார்.

தமிழ்ச்சுடர் க. உயிரவன்  thamilaali@gmail.com

முத்து

தலைவணங்குவோம் இந்தத் தமிழருக்கு!


தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவை மெய்ப்படச் செய்கிறார் சேலம் - ஓமலூரைச் சேர்ந்த முத்து. இவரால் தமிழ் வளர்வது ஜப்பானில்!

''நான் இன்டர்மீடியட் முடித்து பஞ்சாயத்து உதவியாளராகப் பணிபுரிந்தேன். 1942-ல் 'வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டு வேலையை உதறித் தள்ளினேன். இப்போதைய ஃபேஸ்புக் நண்பர்களைப் போல, அப்போது பேனா நண்பர்கள் இருப்பதும் தங்களுக்குள் நட்பு வளர்த்துக்கொள்வதும் வழக்கம். அப்படி என் மகன் சேகரின் பேனா நண்பராக இருந்தவர்தான் ஜப்பான், ஷீமாடா நகரைச் சேர்ந்த சூஜோ மாட்சுனுகா.

1981-ல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகத் தமிழகம் வந்தார் சூஜோ. 'ஒரு ஜப்பானியன் பார்வையில் திருக்குறளும் திருவள்ளுவரும்’ என்ற தலைப்பில் பேச வந்தவரை, என் மகன் சேகர் எங்கள் வீட்டுக்கு அழைத்துவந்தான். தமிழ் இலக்கியம், தமிழர்களின் கலாசாரம், வரலாறு பற்றி நீண்ட நேரம் என்னுடன் உரையாடினார். அவர் ஜப்பான் மொழியில் எழுதிய 'இந்திய இலக்கியங்கள்’ என்ற நூலைக் காட்டினார். அதில் திருக்குறள் பற்றி ஒரு சில வரிகளே இருந்தன. அப்போது நான், 'நீங்கள் திருக்குறள் பற்றி ஜப்பான் மொழியில் விரிவாக எழுத வேண்டும். எங்கள் தமிழ் இலக்கியப் படைப்புகளை ஜப்பானிய மொழியில் அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டேன். கட்டாயம் செய்வதாக வாக்குறுதி அளித்துச்சென்றார். அப்போது முதல் 36 ஆண்டுகளாக எங்கள் கடித நட்பு தொடர்கிறது.

ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறள் ஆங்கிலப் பிரதியை வாங்கி அவருக்கு அனுப்பினேன். அவ்வப்போது மொழிபெயர்ப்பில் அவருக்கு ஏற்படும் சந்தேகங்களைக் கடிதங்கள் மூலம் நிவர்த்தி செய்தேன். சூஜோ, திருக்குறளை ஜப்பான் மொழியில் முழுமையாக மொழிபெயர்த்து முடித்தார். அடுத்ததாக, 'ஜப்பான் மக்களுக்கு பாரதியாரைத் தெரியுமா?’ என்று கேட்டேன். 'காந்தியடிகள், ரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை ஜப்பானியர்களுக்குத் தெரியும். ஆனால், பாரதியாரைப் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை’ என்றார் சூஜோ. நான் பாரதியாரைப் பற்றி அவரிடம் விளக்கி, பாரதியின் கவிதைகளை ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்கச் சொன்னேன். பாரதியார் கவிதைகளின் ஆங்கிலப் பிரதியையும் அனுப்பி வைத்தேன்.

இப்படியே ஜப்பான் மொழியில் திருக்குறள், பாரதி கவிதைகள், வள்ளலார் பாடல்கள், நாலடியார், மணிமேகலை, சிலப்பதிகாரம் எனத் தமிழ் இலக்கியங்களை அவருக்கு அனுப்பி வைத்தேன். சூஜோவும் தீராத ஆர்வம் கொண்டு மொழிபெயர்த்தார். தவிர, நம்முடைய தமிழ்ச் சமூகத்து திருமணம், காது குத்து, பெண்கள் பூப்பெய்தல், இறப்புச் சடங்குகள் அனைத்தையும் புகைப்படங்கள் எடுத்து, அதற்கான விளக்கத்தையும் ஆங்கிலத்தில் எழுதி, ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்க அவருக்கு உதவினேன்.

ஜப்பானியர்கள் திருக்குறளை ஆர்வமாகப் படிக்கிறார்களாம். ஜப்பானில் ஒரு மகளிர்க் கல்லூரியில் திருக்குறளை ஒரு பாடமாகவே வைத்து உள்ளனர் என்ற தகவலை சூஜோ சொன்னபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாரதியின் குயில் பாட்டும், 'வள்ளலார் வாய்ஸ்’ என்ற நூலும் ஜப்பானில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜப் பானில் சில புத்த விஹார்களில் வள்ளலார் புத்தகங்களை வைத்தும் வணங்குகிறார்களாம். 'சமத்துவம், ஜீவகாருண்யம், அனைவரிடத்திலும் அன்பு பேணுதல் ஆகியவற்றில் புத்தர் மற்றும் வள்ளலாரின் கருத்துகள் ஒரே மாதிரியானவை’ என்று சூஜோ அடிக்கடி என்னிடம் சொல்வார்.

இதை எல்லாம்விட, சூஜோ செய்த ஒரு விஷயம் என்னை மிகவும் நெகிழவைத்துவிட்டது. 'தமிழ் இலக்கியங்களை ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்க, தமிழகத்தைச் சேர்ந்த முத்து என்பவர் எனக்கு மிகவும் உதவினார்’ என்று சூஜோ ஜப்பான் அரசிடம் பரிந்துரை செய்ததன் விளைவு, ஜப்பான் அரசு 2007-ம் ஆண்டு என் உருவப்படம் பொறித்த தபால் தலையை வெளியிட்டது. இது ஜப்பான் மதிப்பில் 80 'யென்’. நம் நாட்டு மதிப்பில் 27 ரூபாய். சூஜோ தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை ஜப்பானியர்களிடம் பரப்பியதுபோல, நானும் ஜப்பானில் உள்ள சிறுகதைகளைத் தொகுத்து, 'ஜப்பானிய தேவதைக் கதைகள்’ என்ற தலைப்பில், தமிழில் புத்தகமாக எழுதி வெளியிட்டு உள்ளேன். 'மனித நாற்காலி’, 'முன்னொரு காலத்தில் ஜப்பானில்’ என்ற தலைப்புகளிலும் ஜப்பானிய இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்'' என்கிறார் முத்து.

தலைவணங்குவோம் இந்தத் தமிழருக்கு!

முத்து அய்யாவோடு அலைபேசியில் அழைத்து அவரின் தமிழ் சேவைக்கு வாழ்த்து தெரிவித்தேன். 94 வயதிலும் நல்ல ஞாபக சக்தியோடு பேசினார்.
அவரோடு பேச விரும்புவர்கள் பகல் நேரத்தில் பேசுங்கள். இரவில் அழைத்து தொல்லை தரவேண்டாம்.

S. M. Muthu / friend of japanese tamil scholar. Soso Madsunaka
17,Subramaniar kovil street
Omalur - 636455,TN,India. mobil. 97868-70005

தமிழ்ச்சுடர் க. உயிரவன்  thamilaali@gmail.com
உயிர் பெறும் ஓலைச்சுவடிகள்:


பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பதோடு, அவற்றைப் புதுப்பித்தும், நகலெடுத்தும் தருகிறது ஓர் நூலகம்

சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறையின்கீழ் இயங்கும் ‘கீழ்த்திசை நூலகம்’ மற்றும் ஆய்வு மையம், அரிதான பழமை வாய்ந்த ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளால் நிரம்பி வழிகிறது. தமிழ் மொழியின் ஆரம்பகால ஊடக சாதனமாகப் பயன்பட்ட ஓலைச் சுவடிகளைப் பாதுகாப்பதும் அவ்வப்போது கிடைக்கிற சுவடிகளை ரசாயன முறையில் புதுப்பிப்பதையும் மிகவும் நேர்த்தியாகச் செய்து வருகிறது, இந்த நூலகம். இலக்கியம், வரலாறு, தத்துவம், அறிவியல், வட்டார வரலாறுகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட தலைப்புகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, உருது, அரபு, பாரசீகம் உள்ளிட்ட மொழிகளில் சேகரிக்கப்பட்ட 72 ஆயிரத்து 314 ஓலைச்சுடிகள் இங்கே கணக்கில் வரவு வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த இந்த கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தின் தோற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் இரண்டு பேர். ஒருவர், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த காலின் மெக்கன்சி. மற்றவர், இந்தியாவில் பிறந்த ஆங்கிலேயேரான பிரௌன். காலின் மெக்கன்சி 1783ல் இந்தியாவிற்கு வந்து, கிழக்கிந்தியக் கம்பெனியின் பொறியியல் பிரிவில் பணியாற்றியவர். பழமையான கணக்குகள், இந்திய வரலாறுகள், கீழ்த்திசை மொழிகள் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவராக இருந்திருக்கிறார். இதனால், அவர் ஏராளமான சுவடிகள், வரைபடங்கள், மற்றும் நாணயங்களை சேகரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்.

மொழியியல் அறிஞரான பேராசிரியர் லேடன் என்பவர், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது சேகரித்த பல தொகுப்பினை லண்டனில் உள்ள இந்திய அலுவலகத்தில் பார்த்த பிரௌன், பல முயற்சிகளுக்குப் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் 10,000 பவுண்டுகளுக்கு அந்த ஓலைச்சுவடிகளை விலைக்கு வாங்கி, அதில் ஒரு பகுதியை சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறார். மெக்கன்சியால் சேகரித்த சுவடிகள் உட்பட அனைத்தையும் இப்போது எங்கள் நூலகத்தில் வைத்து பாதுகாத்து வருகிறோம்" என்கிறார், இந்த நூலகத்தின் காப்பாட்சியர் சந்திரமோகன்.

1870ல் சென்னை மாநிலக் கல்லூரியில் தொடங்கப்பட்ட இந்த நூலகம், இப்போது சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள முக்கியமான ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகளாக மாற்றம் செய்யப்படுகின்றன. மேலும் சிதைந்த தாள், சுவடிகள் மற்றும் அச்சு நூற்களை, சிப்பான் துணிகளைக் கொண்டு சீரமைக்கிறார்கள். இங்குள்ள சுவடிகளிலிருந்து இதுவரை 200 புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆராய்ச்சி மாணவர்கள் பலர் இங்கு வந்து தங்களுக்குத் தேவையான விஷயங்களை சேகரித்துச் செல்கின்றனர். மேலும் வெளிநாட்டினரும் இங்கு உள்ள ஓலைச்சுவடிகளை பார்த்துச் செல்கின்றனர். ஓலைச்சுவடிகளை இங்கு விலை கொடுத்தும் வாங்கிக் கொள்கிறோம். நூலகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். அப்படி வாங்கிய ஓலைச்சுவடிகள், ரசாயனப் பொருட்கள் இட்டு பாதுகாக்கப்படுகின்றன" என்கிறார் சந்திரமோகன்.

தமிழகத்தில் உள்ள 12,617 ஓலைச்சுவடிகளின் அடிப்படை விவரங்களைத் திரட்டி, அதில் 1,862 சித்த மருத்துவ சுவடிகளை இவர்கள் சி.டி.யில் பதிவு செய்திருக்கிறார்கள். இதனால், குறுந்தகடு மூலம் சித்த மருத்துவ ஆய்வாளர்கள் தகவல்களை எளிதாகப் பெறமுடிகிறது.

பழமையான ஓலைச்சுவடிகளை சேகரித்து வைத்திருப்பவர்கள் இங்கு வந்து அவற்றைக் கொடுத்தால், சென்னை அருங்காட்சியகத்திலுள்ள சுவடிப் பாதுகாப்பு மையம் மூலம் எவ்விதக் கட்டணமும் இன்றி உரிய வேதிப் பொருட்கள் இட்டு, ஓலைச்சுவடிகளை சீரமைத்தும் தருகிறார்கள்.

ஓலைச்சுவடிகள் மூலம் தகவல்களைத் திரட்டவும், சுவடிகளைச் சீரமைக்கவும்
 தொடர்பு எண்: 044-2536 5130
தமிழ்ச்சுடர் க. உயிரவன்  thamilaali@gmail.com
தமிழ் எண்களில் கடிகாரம்


உலகிற் சிறந்தது தமிழ் மொழியின் என நாம் அனைவரும் அறிந்ததே, ஆனாலும் அவற்றின் சில கூறுகளை நாம் பயன்படுத்தாமலேயே வாழ்ந்து வருகிறோம். நாட்கட்டிகளிலும், கணித செயல்பாடுகளிலும் நாம் பயன்படுத்தி வரும் எண்கள் இந்திய அரேபிய எண்கள் ஆகும். தமிழ் தனக்கென எண் உருக்களை கொண்டுள்ளது அவ்வாறான எண்களை தமிழ் எண்கள் என்கிறோம்.

பல ஆண்டுகள் வாய்பட்டு தாள்களில் மட்டுமே பெயரளவில் இடம் பெற்றிருந்த இந்த தமிழ் எண்கள் இன்று குழந்தைகள் பாடப் புத்தகங்களில் அச்சாகி படித்து வருகின்றனர். தமிழறிஞர்கள் தவிர தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழர்களுக்கு தமிழ் எண்கள் தெரியாத நிலையே உள்ளது. 

இந்த நிலையை மாற்றி அமைக்க எங்களது ஒரு சிறிய முயற்சி இந்த " தமிழ் எண்களில் இனிக் கடிகாரம் ".

தமிழ்மொழியின் சிறப்பே, அது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணியென ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளதே. அறிவியலின் தொடக்கம் தான் எண்ணியல். தமிழ் மொழியின் எண்ணியலின் சிறப்புக் கூறுகளை நாம் பயன்படுத்தாமலேயே வாழ்ந்து வருகிறோம். எண் என்ற சொல்லுக்கு, நீறுதல் என்ற பொருளும் உள்ளதால், ஒன்று தொடங்கி நீண்டு செல்லும் இலக்கங்களையும் எண் என்ற பெயரால் குறித்தனர். தமிழறிஞர்கள் தவிர தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான தமிழர்களுக்கு தமிழ் எண்கள் தெரியாத நிலையே உள்ளது. இந்த நிலையை மாற்றி அமைக்க முயற்சிக்கிறோம்.

இந்திய மொழியின் எண்களும் இலக்க முறைகளும் தமிழ் மூலத்தைக் கொண்டவைகளே, இவைகளைப் பற்றியெல்லாம் அறிந்திராத மேலைநாட்டவர், எண்களைக் கண்டுபிடித்தவர் ஆரியர்களே என நம்பினர். அக்கூற்று எவ்வாறு பொய்யானது என்பதை அடுத்து எண்களைப் பற்றிய விளக்கங்களால் தெரிந்து தெளிவு அடைவோம்.

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தரும் என்பர். அறிவியலின் தொடக்கம் தான் எண்ணியல். குறிஞ்சி நில மக்கள், முல்லை நிலத்துக்குக் குடிபெயர்ந்தனர். அடர்ந்த புல்வெளியில் தங்களது ஆனிரை வளர்க்கத் தொடங்கிய ஆயர்குல மக்கள், தங்கள் ஆடுமாடுகளின் எண்ணிக்கையைக் கூட அறிந்திருக்கவில்லை. விலங்குளால் அடித்துக் கொல்லப்பட்ட கால்நடைகள் எத்தனையென்பதை அவர்களால் அறிய இயலவில்லை. இதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தனர்.

.....தமிழ்ச்சுடர் க. உயிரவன்  thamilaali@gmail.com
இந்தியாவின் தேசிய மொழி - நிச்சயமாக இந்தி அல்ல!

இந்தியாவின் தேசிய மொழி இந்தி என அரசியல் சாசனச் சட்டம் கூறுகிறது. ஆனால் உண்மையில் இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒன்றே இல்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.
அரசியல் சாசனச் சட்டத்தின் 343வது பிரிவின்படி இந்தியாவின் தேசிய மொழி, அதிகாரப்பூர்வ அலுவலக மொழி இந்தி. ஆனால் இந்தியை ஆட்சி மொழியாக்க தமிழகம் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முயற்சியை அன்றைய மத்திய அரசு கைவிட்டது.

இந்தித் திணிப்பை கண்டித்து தமிழகத்தில்தான் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக தொடருவது என அப்போது தீர்மானிக்கப்பட்டது. இன்று வரை இதுதான் அமலிலும் உள்ளது.

மத்திய அரசு அலுவலகங்கள், மாநில அரசு அலுவலகங்கள், நாடாளுமன்றம் ஆகியவற்றில் இன்று வரை ஆங்கிலம் இணைப்பு மொழியாக, கிட்டத்தட்ட அலுவலக மொழியாகவே மாறிப் போயுள்ளது.

பின்னர் 1967ம் ஆண்டு ஆங்கிலத்தை அலுவலகப் பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள தனிச் சட்டத் திருத்தமே கொண்டு வரப்பட்டது. அப்போது இந்திதான் ஆட்சி மொழி, அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இந்தியா பல மொழிகளைக் கொண்ட நாடு என்பதால், ஆங்கிலம் இணைப்பு அலுவலக மொழியாக பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், ஒரு குறிப்பிட்ட மொழியை ஆட்சி மொழியாக கொள்ளவும் முடியாது என்ற கருத்தும் அப்போது மறைமுகமாக தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் அதேபோல 351வது பிரிவின்படி, இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அதை ஊக்கப்படுத்த வேண்டியதும் மத்திய அரசின் கடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், காஷ்மீரி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, உருது ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக 1950ம் ஆண்டில் வெளியிடப்பட்ட எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றது.

அதன் பிறகு இந்தப் பட்டியல் 3 முறை விரிவாக்கப்பட்டது. அதன்படி சிந்தி முதலில் இந்தப் பட்டியலில் இடம் பெற்றது. பின்னர் கொங்கனி, மணிப்பூரி, நேபாளி ஆகியவை சேர்க்கப்ட்டன. பின்னர் போடோ, சந்தாலி, மைதிலி, டோக்ரி ஆகியவை சேர்க்கப்பட்டு தற்போது 22 மொழிகள் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ளன.

இந்தப் பட்டியலில் மேலும் சில மொழிகளைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் தொடர்ந்து இருந்து வருகிறது. அது பரிசீலனையிலும் உள்ளது.

மும்மொழித் திட்டம்...

இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழித் திட்டம் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி இந்தி, ஆங்கிலம் தவிர பிராந்திய மொழி ஒன்றை சேர்த்து இந்த மும்மொழித் திட்டம் உருவாக்கப்பட்டது. இது குறிப்பாக இந்தி பேசாதவர்கள் அதிகம் இருந்த தென்னிந்திய மாநிலங்களுக்காக உருவாக்கப்பட்டது.

1968ம் ஆண்டு மும்மொழித் திட்டத்தை தேசிய கல்விக்கான கொள்கைத் திட்டத்தில் வலியுறுத்திக் கூறப்பட்டது. பின்னர் 1986ம் ஆண்டிலும் இது வலியுறுத்தப்பட்டது. பின்னர் 1992ம் ஆண்டு திட்ட நடவடிக்கையாக இது பதிவு செய்யப்பட்டது.

இந் நிலையில் 2000மாவது ஆண்டு ஜனவரி மாதம் தேசிய பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், இந்தி, ஆங்கிலம், பிராந்திய மொழிகள் தவிர சமஸ்கிருதம், அரபி, பிரெஞ்சு, ஜெர்மன் போன்றவையும் நவீன இந்திய மொழி வரிசையில் சேர்க்கப்பட்டன.

இந்தி பேசாதவர்கள் அதிகம் நிறைந்துள்ள மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக்க கடும் எதிர்ப்பு கிளம்பிய காரணத்தால்தான் இந்தியை ஒரே ஆட்சி மொழியாக அறிவிப்பதற்கு பெரும் தடையாக மாறியது.

இந்தி வளர்ச்சிக்காக மத்திய அரசு பெருமளவில் நிதியை ஒதுக்கியதும், திட்டங்களைத் தீட்டியதும், இந்த மாநிலங்களில் இந்தித் திணிப்பாக பார்க்கப்பட்டது. இதனால் இந்த மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக பெரும் எதிர்ப்பு வெடித்தது.

இதில் ஒரு படி மேலாக, 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக சட்டசபையில், சென்னை உயர்நீதிமன்ற ஆட்சிமொழியாக தமிழை அறிவிக்கக் கோரி தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்பாக இதே பெங்காலியை கொல்கத்தா உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என்று கோரி மேற்கு வங்க சட்டசபையும் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்தத் தீர்மானங்களுக்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் சொன்ன முக்கிய காரணம், அரசியல் சாசனச் சட்டத்தின் 348 (2) பிரிவு மற்றும் பிரிவு 7ன் கீழ், இந்தி பேசும் மாநிலங்களான பீகார், உ.பி. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவற்றில் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது தான்.

அப்படி இருக்கும்போது தமிழ் அதிகமாக பேசப்படும் தமிழகத்திலும், பெங்காலி பேசப்படும் மேற்கு வங்கத்திலும் உயர்நீதிமன்றங்களில் சம்பந்தப்பட்ட மொழிகளே ஆட்சி மொழியாக வேண்டும் என்று நியாயமான வாதம் முன் வைக்கப்படுகிறது.

அரசியல் சட்டத்தில் இந்திக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ள இந்தச் சலுகை, தமிழுக்கும் தரப்பட வேண்டும் என்பது முதல்வர் கருணாநிதியின் வாதம். ஆனால் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தி்ன் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஒரேயடியாக நிராகரித்து விட்டது.

இதற்கு உச்சநீதிமன்றம் சொன்ன காரணம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்தியா முழுவதும் இடமாற்றம் செய்யப்படக் கூடிய பதவியில் இருப்பவர்கள். எனவே தமிழ் தெரிந்தவர்களை மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிப்பதும், பெங்காலி தெரிந்தவர்களை மட்டும் மேற்கு வங்கத்தில் நியமிப்பதும் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றது.

ஆனால் இந்தி பேசாத நீதிபதிகளை பீகார், உ.பி, ம.பி, ராஜஸ்தான் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றும்போதும் இதே சிக்கல்தான் ஏற்படுகிறது. ஆனால், இதுகுறித்து உச்சநீதிமன்றம் வாய் திறக்கவில்லை.

தற்போது ஆட்சி மொழி குறித்த விவாதம் மீண்டும் பெரிய அளவில் வெடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை மையமாக வைத்து அது கிளம்பியுள்ளது.

அழகிரி நாடாளுமன்றத்தில் தமிழில் பேச விரும்புகிறார். ஆனால் மத்திய அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்று கூறுகிறது நாடாளுமன்ற விதி. இதுதொடர்பாக அழகிரி விடுத்த கோரிக்கையையும் நாடாளுமன்ற செயலகம் நிராகரித்து விட்டது.

ஆனால், ஒரு நாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாக இருக்கும் ஒரு மொழியில், நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவது நியாயமற்றது என்ற விவாதம் வெடித்துள்ளது.

எம்.பிக்கள் தத்தமது தாய் மொழியில் பேசும்போது அதே சலுகை அமைச்சர்களுக்கும் தரப்படாதது நியாயமில்லை என்ற வாதமும் கிளம்பியுள்ளது.

மொத்தத்தில் இந்தியா என்ற ஒரே நாட்டில் ஒரு குறிப்பிட்ட மொழி மட்டும் தேசிய மொழியாக இல்லாத நிலையும், தேசிய மொழிகளில் ஒன்றான ஒரு மொழியில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் மட்டும் பேசலாம் அமைச்சர்கள் பேசக் கூடாது என்ற முரண்பாடான நிலையும் தான் நிலவி வருகிறது.

தமிழ்ச்சுடர் க. உயிரவன்

thamilaali@gmail.com

தமிழன் இல்லாத நாடில்லை. தமிழனுக்கென்று ஓரு நாடில்லை
Eelam
'ஈழத்தமிழர்களாகிய நாம் இனவெறி படைத்தவர்கள் அல்ல, போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்ல. நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோக்
கருதவில்லை. சிங்களப் பண்பாட்டைக் கெளரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை. நாம் எமது வரலாற்றுத் தாயகத்தில் ஒரு தேசிய மக்கள் இனம் என்ற அங்கீகாரத்துடன், நிம்மதியாக, சுதந்திரமாக, கெளரவத்துடன் வாழ விரும்புகிறோம்."

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
இரண்டாயிரமாண்டுக்கு முன்பே, உலகத்துக்கு சகோதரத்துவத்தையும், உலக ஒற்றுமையையும் போதித்து 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" எனக்கூறியவர்கள் தமிழர்கள். அமைதியையும், அறிவையும், செல்வத்தையும் மட்டும் நாடி நின்ற ஈழத் தமிழர்கள், தமது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னணியில் திகழ்ந்த ஈழத் தமிழர்கள், தனிநாடு வேண்டி ஆயுதமேந்திப் போராடுமளவுக்கு எவ்வாறு உந்த்ப்பட்டார்கள் என்பதற்கான விடை தமிழர்களின் வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு நன்கு புரியும்.

தமிழர்களின் மொழிக்கும், தமிழ் மண்ணுக்கும் அவர்களது வாழ்வு நிலைக்கும் இழிவு ஏற்படாத காலகட்டத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று உலக சகோதரத்துவத்தைப் பேணிய நமது முன்னோர்கள், தமது மொழிக்கு இழிவு ஏற்பட்டு, தமிழ் மண் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதெல்லாம் தமக்கிடையேயுள்ள பிரிவினைகளை மறந்து ஒன்றுபட்ட தமிழர்களாக, 'நாமார்க்கும் குடியல்லோம,; நமனை அஞ்சோம்" எனப் பொங்கியெழத் தவறியதில்லை. தமிழை இழிவு படுத்திய வடநாட்டவர்களான கனக - விசயன்களை வென்று, அவர்கள் சுமந்த கல்லில் தமிழ்த்தாய்க்குச் சிலையெடுக்கவும், தமிழ் மண்ணைக் காக்க அன்னியர் மேல் படையெடுக்கவும் தயங்கியதில்லை. ஆகவே, தாயிலும் இனிய தமிழ் மொழி 1956 இல் தனிச்சிங்களம் மட்டும் சட்டத்தால் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட போது, ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகமான வடக்கு- கிழக்கு மாகாணங்கள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் பறிபோன போது, தமது சொந்த மண்ணில், தமது மூதாதையர் ஆயிரமாயிரம் ஆண்டு கட்டிக்காத்த ஈழத்தமிழ் மண்ணில், ஈழத்தமிழர்கள் திட்டமிட்டுச் சிறுபான்மையினராக்கப்பட்ட போது பொங்கியெழுந்ததில் வியப்பேதுமில்லை! எமது முன்னோர்கள் தமிழையும், தமிழ்
மண்ணையும் காக்கத் தவறியதில்லை அதைத் தான் ஈழத்தமிழர்களும் இன்று செய்கிறார்கள்.

ஈழத்தமிழர்களுக்குத் தனிநாடு, அதாவது தமிழீழம் மலர வேண்டும், தமிழீழத்தில் மட்டும் தான் தமிழர்கள் பாதுகாப்புடன், நிம்மதியாக வாழமுடியும் என்ற தமிழீழக் கொள்கை திடீரென பிரபாகரனின் கனவிலிருந்து உதித்ததோ அல்லது ஈழத்தமிழர்கள் குறுகிய இன, மொழி மனப்பான்மை கொண்டவர்கள் என்பதால் உருவானததுமல்ல.
ஈழத்தமிழர்கள் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து தமிழீழம் மலரப் போராடவேண்டும் என்று வட்டுக்கோட்டை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழ்த் தலைவர்கள் அனைவரும் தமது வாழ்நாள் முழுவதையும் சனநாயகத்துக்கு அர்ப்பணித்த சனநாயகவாதிகளாவார்.
ஈழத்தமிழர்களால் சனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் காந்தீய முறையில் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி 'ஈழத்துக்காந்தி" எனப் பெயரும் பெற்ற தந்தை செல்வநாயகம், சிங்களத் தலைவர்களால் பலமுறை ஏமாற்றப்பட்டு, எத்தனையோ இனக்கலவரங்களில் தமிழர்களின் உயிர்களும், உடைமைகளும் பறிபோனதைக் கண்டு, இனிமேல் 'கடவுள் வந்தாலும் தமிழர்களைக் காக்க முடியாது" என நொந்து இலங்கைத் தீவில், எமது மண்ணில், தமிழர்கள் பாதுகாப்பாக வாழ ஒரே வழி தமிழீழம் மலர்வது தான் எனத் தீர்மானித்து "உயிரைக் கொடுத்தும் தமிழீழம் அமைப்போம்" என ஈழத்தமிழர்களை அழைத்தார்.
(தொடரும்..)


தமிழ்ச்சுடர் க. உயிரவன்

thamilaali@gmail.com
பண்பாட்டுக்கோலம்
சேலையை மறந்து வாழவும்
சோலைக் கூந்தலை நறுக்கவும்
பொட்டு அகற்றிச் சுற்றவும்
கெட்டுப் போனதோ காலம்.

பெற்றோரைப் பிரிந்து வாழ்வதும்
பெற்றபிள்ளையை மறந்து வாழ்வதும்
கட்டிய கணவனை அடிக்கடி மாற்றவும்
விட்டுப் போனதோ எமது பண்பாடு.

மாற்றான் பணிகள் செய்யவும்
வேற்றான் உறவுகளைக் கவருவதும்
சீற்றான் துணையை நாடவும்
மேற்றான் பண்பாடு பிடித்ததோ

தானம் தேடிக் கொள்ளவும்
மானம் பறந்து போகவும்
ஊன உடலை ஆக்கவும்
ஈன உலகம் இடம் தருமா?

This post has been edited by uyiravan: 29 September 2010 - 02:54 AM

க.உயிரவன்

http://www.thamilaali.com

thamilaali@gmail.com

வேலுப்பிள்ளை திருவீன்கடம்
(வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

gt;10/01/1924 to 06/01/2010)

இந்த ஆண்டு தை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங்கு தருகிறோம்.

இது தமிழரின் போராட்ட வாழ்வோடு ஒன்றியது என்பதால் தொடராக வரவுள்ளது. வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கலாம். தலைப்பு மட்டும் மாற்றப்படும். இனி கட்டுரை.....

யாழ் மாவட்டம் வடமராட்சியில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசமே வல்வெட்டித்துறையாகும்.

வல்வெட்டித்துறை என்னும் பெயர் அப்பிரதேசத்துக்கு வந்ததே ஒரு சுவாரசியமான கதைதான். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள் இலங்கையை ஆண்டபோது `வெல்வெட்` என்னும் ஒரு வகை துணி அப்பிரதேசத்தில் இருந்த ஒரு துறைமுகம் மூலமாக ஏற்றுமதியானது.

வெல்வெட் + துறை தான் பிற்காலத்தில் மருவி வல்வெட்டித்துறையானது.

வல்வெட்டித்துறையில் வசித்த பெரும்பாலான மக்களின் பரம்பரைத் தொழிலாகவிருந்தது மீன் பிடியாகும். ஆனாலும் அங்கிருந்த மக்களில் சிலருக்கிருந்த கடல் பற்றிய அறிவு காரணமாக தூர நாடுகளுக்கான கப்பல் பயணத்தின் மாலுமிகளாகவும் செயற்பட்டனர். ஆரம்பகாலத்தில் கடத்தலுக்கும் பெயர் போன ஒரு ஊர் அது. ஆனாலும் துரதிஷ்டவசமாகவும் நியாயமற்ற வகையிலும் வல்வெட்டித்துறை கடத்தலுடன் மட்டுமே தொடர்பு படுத்தி பேசப் பட்டது.

வல்வெட்டித்துறையும் யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளைப் போன்றே பெரும் எண்ணிக்கையிலான கல்வியாளர்களையும் அரசாங்க உத்தியோகத்தர்களையும் உருவாக்கிய ஒரு ஊராகும்.

அவ்வாறாக வல்வெட்டித்துறையில் மிக்க சிறப்போடு வாழ்ந்த ஒரு குடும்பம் தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையினதும் அவரது மூதாதையர்களினதும் குடும்பமாகும்.

`திருமேனியார் குடும்பம்` என்றுதான் வேலுப்பிள்ளை அவர்களது மூதாதையர்கள் வழி வந்தவர்களை மரியாதையோடு அழைப்பார்கள் அந்த ஊர் மக்கள்.

வல்வெட்டித்துறையிலிருக்கும் புகழ் பெற்ற சிவன் கோயிலின் பரம்பரை அறங்காவலர்களாக இருந்தவர்களும், இருப்பவர்களும் வேலுப்பிள்ளையின் தந்தை வழி வந்த குடும்பத்தினர்தான். அந்தக் கோயிலே பிரபாகரனின் முன்னோர்களால் தான் கட்டப்பட்டது.

பிரபாகரனின் மூதாதையர்களே சிவன் கோயிலை கட்டுப்படுத்தி வந்தவர்கள் என்ற காரணத்தால் எசமான் குடும்பம் என்றும் அழைக்கப்பட்டார்கள்.

பிரபாகரனின் முன்னோர்களில் ஒருவரான ஐயம்பிள்ளை என்பவர் புகழ்பெற்ற வணிகராகத் திகழ்ந்தவர். புகையிலை மற்றும் சாயப் பொருட்களை கடல் வழியாகப் இந்தியாவின் கடற்கரையை அண்டிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்தவர்.

டச்சுக்காரர்கள் இலங்கையை ஆண்ட காலத்தில் இலங்கையின் புகழ்பெற்ற வணிகர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். அவருடைய மகனான வேலாயுதம் என்பவரும் அதேபோல வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்.

அவரது பிள்ளையான வெங்கடாசலம் காலத்தில் அந்தக் குடும்பத்தின் வியாபாரமும், செல்வ வளமும் பல மடங்கு பெருகியது. அவர் சொந்தமாக பன்னிரண்டு கப்பல்களை வைத்து வாணிபம் செய்தவர். இந்தியா, பர்மா, மலேசியா முதலான நாடுகளுக்கு அவர் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் மிகப் பெரிய வணிகராகத் திகழ்ந்தார். அத்துடன் ஒரு கொடை வள்ளல்.

அந்தக் காலத்தில் விவசாயக் காணிகளையும் பெரும் பண்ணைகளையும் சொந்தமாகக் கொண்டவர். அப்படியான ஒரு 90 ஏக்கர் காணி முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இருந்தது. இங்குதான் புலிகளும் இராணுவத்தினரும் இறுதி யுத்தத்தில் மோதிக் கொண்டனர் என்பது மிகவும் அதிசயத் தக்க ஒரு நிகழ்வு.

அவரை வல்வெட்டித்துறை மக்கள் `பெரிய தம்பி` என்று அன்போடு அழைப்பார்கள். 1822ல் வெங்கடாசலத்தின் மறைந்த தந்தை வேலாயுதம் ஒருநாள் அவரின் கனவில் வந்து சிவனுக்காக ஒரு கோயில் கட்டும்படி கேட்டுக் கொண்டாராம். ஏற்கனவே அந்தக் குடும்பத்துக்கு பிள்ளையார் மற்றும் அம்மன் கோயில்களுடன் தொடர்பிருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்றிலிருந்து அதை தனது வைராக்கியமாகவே கொண்டிருந்தார் அவர். சிறிது சிறிதாக கோயில் கட்டுவதற்கான பணத்தைச் சேர்க்கத் தொடங்கினார். விரைவிலேயே பெருந்தொகைப் பணத்தைச் சேர்த்துவிட்டார்.

முதன் முதலாக அம்மன் கோயிலுக்கு அருகாக 60 `பேர்ச்` அளவு கொண்ட காணி ஒன்றை வாங்கினார். தான் கொண்ட வைராக்கியம் காரணமாக அன்றிலிருந்து சிவன் கோயில் கட்டி முடியும்வரை தன் உடம்பில் மேலாடை உடுத்தாமல் ஒரு தவம் போன்று இருந்த காரணத்தால் `திருமேனியார்` என்று அவரையும், `திருமேனியார் குடும்பம்` என்று இவருடைய சந்ததியினரையும் மக்கள் அழைத்தார்கள்.

வீட்டுக்குக்கூடச் செல்லாமல், கோயில் கட்டும் இடத்திலேயே தங்கியிருந்து. அதை முழுமையாகக் கட்டிமுடித்து கும்பாபிஷேகம் நடத்திய பெருமைக்குரியவர் இந்தத் `திருமேனியார்` வெங்கடாசலம்!

வெங்கடாசலம் தன்னுடைய சொந்தப் பணத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டி முடித்தார். அதனால் அவர்களது குடும்பமே அந்தக் கோயிலின் பரம்பரை சொந்தக்காரர்களாகவும் தர்மகர்த்தாக்களாகவும் ஆனார்கள்.

ஒருவாராக 1867-ம் ஆண்டு சிவன் கோயில் கட்டப்பட்டு அந்த ஆண்டே குடமுழுக்கும் செய்யப்பட்டது.

வெங்கடாசலமும் அவரது சகோதரர் குழந்தைவேல்பிள்ளையும் சேர்ந்து கொழும்பு செக்குத் தெருவிலும் கீரிமலையிலும் ஏன் பர்மியத் தலைநகர் ரங்கூனிலும் கூட கோயில் கட்டினார்கள்.

வெங்கடாசலத்தின் மகனின் பெயரும் வேலுப்பிள்ளை தான். இந்த வேலுப்பிள்ளையாரின் மகனானதிருவேங்கடத்தின் மகன்தான் பிரபாகரனின் தந்தையான வேலுப்பிள்ளை. திருவேங்கடம் தனது ஒரே ஒரு மகனுக்கு தன் தந்தையின் ஞாபகார்த்தமாக வேலுப்பிள்ளை என்றே பெயரிட்டார்.

பிரபாகரனின் அப்பாவான வேலுப்பிள்ளையும் தமது முன்னோர்கள் போலவே கடவுள் பக்தி கொண்டவராகவும், பொது சேவையில் நாட்டம் கொண்டவராகவும் இருந்தார். அவருக்கு அரசியலில் எந்தவித விருப்பமும் இருந்தது கிடையாது. தம்முடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து உயர்ந்த பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது.

இலங்கையை பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டு கொண்டிருந்த 1943-ம் ஆண்டில் தனது பத்தொன்பதாவது வயதில் இலங்கை அரசுப் பணியில் எழுத்தராகச் சேர்ந்தார் வேலுப்பிள்ளை. முதலில் ரயில்வே துறையில் அவருக்கு வேலை கிடைத்தது. அதன் பிறகு சில தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்று மாவட்ட நில அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். முப்பத்தொன்பது ஆண்டுகள் கருத்தோடு வேலை செய்து, 1982-ம் ஆண்டில்தான் அவர் பணி ஓய்வு பெற்றார். 1982 ல் அவர் மாவட்ட நில அதிகாரியாக ஓய்வு பெற்றபோது இலங்கையின் காணி அமைச்சராக இருந்தது காமினி திசாநாயக்காவாகும்.

அவருக்கு சிங்களவர்கள் மீது எந்த வெறுப்பும் இருந்ததில்லை. சிங்கள மொழியிலும் நல்ல தேர்ச்சி கொண்டிருந்தார் அவர். அம்மொழியில் தேர்வும் எழுதி வெற்றி பெற்றவர். நேர்மையும் கறார்த்தன்மையும் கொண்ட அதிகாரியாக அறியப்பட்ட வேலுப்பிள்ளை, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

வேலுப்பிள்ளை தனது இருபத்து மூன்றாம் வயதில் அதாவது 1947ல் பார்வதி அம்மாளை மணம் முடித்தார்.

வேலுப்பிள்ளை பார்வதி தம்பதிகளுக்கு நான்கு பிள்ளைகள்.

மூத்தவர் மனோகரன் 1948ல் பிறந்தார். கப்பலில் வானொலி அதிகாரியாகப் பணியாற்றியவர். தற்போது டென்மார்க்கில் வசிக்கிறார்.

அடுத்தவர் ஜெகதீஸ்வரி 1949ல் பிறந்தார். பின்னாளில் அப்போதிக்கரியாக இருந்த மதியாபரணத்தை கல்யாணம் செய்தார். ஐரோப்பாவில் வசித்த இவர்கள் தற்போது தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கலைஞர் கருணாநிதி நகரில் வசிக்கிறார்கள்.

அடுத்தவர் வினோதினி 1952ல் பிறந்தார். பின்னாளில் வர்த்தகப் பட்டதாரியான ராஜேந்திரனை கல்யாணம் செய்து கொண்டவர். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன்னர் கனடா சென்ற அவர் தற்போதும் அங்கேதான் வசிக்கிறார்.

கடைக்குட்டியாகப் பிறந்தவர் சாட்சாத் பிரபாகரனே தான். 1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார். அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.

அவருடைய தாய்மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார்.

இக்குழந்தையின் பிறப்பின் பின்னாளும் முன்னாளும் ஒரு பெரும் வரலாறே அடங்கிக் கிடக்கிறது.
thamilaali@gmail.com

பின்பற்றுபவர்கள்